மேற்கே துருக்கியில் தொடங்கி தூர கிழக்கின் பாகிஸ்தானின் வடக்கில் உள்ள வட மேற்கு பதான் ப்ரோவின்ஸ் பகுதி வரை ஒரு நீண்ட இஸ்லாமிய தாழ்வாரமாக பார்க்கப்படுகிறது.  இந்த பகுதி ஒரு நீண்டதேன் கூடு போன்றதாக சர்வதேச அரசியல் ஆராச்சியாளர்கள் கருதுகிறார்கள்.  இந்த தேன்கூட்டை கூடுமானவரை கலைக்காமல் இருப்பது சர்வதேச அரசியலுக்கு நன்மையாகவே இருக்கும் ஆனால் அவ்வப்போது அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கிற பின்னணியில் இந்த பகுதி பல தாக்குதல்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகி இருக்கிறது.  

தற்போதைய நூற்றாண்டின் மிக பெரிய அச்சுறுத்தலாக அணு ஆயுதம் கருதப்படுகிறது.  இந்த அணு ஆயுதம் என்பது அரசு ஸ்திரத்தன்மையற்ற, அரசு அல்லாத தீவிரவாத இயக்கங்களை ஆதரிக்கிற நாடுகள் வைத்திருப்பதை அமெரிக்கா தங்கள் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக மட்டுமன்றி உலக சமாதானத்தை விரும்பும் உலக நாடுகளுக்கான அச்சுறுத்தலாக கருதுகிறது

மற்ற பகுதிகளான ஐரோப்பிய நாடுகள் இது போன்ற ஒரு மன நிலையில் இருப்பதில்லை அவர்களின் பாதுகாப்பு கொள்கை அமெரிக்காவின் கொள்கையில் இருந்து மாறுபட்டது.  அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கை பேர்ல் ஹர்பயர் மற்றும் இரட்டைக்கோபுர சம்பவத்திற்கு பிறகு அச்சுறுத்தலை அது வளரும் முன்பே அளிக்கும் தன்மையை கொண்டதாக உள்ளது.  கியூபாவில் தொடங்கி வியட்நாம் இராக் ஆப்கானிஸ்தான் போன்ற சர்வதேச தலையீடுகள் இந்த கொள்கையால் ஏற்பட்டதே.  

நேரடியாக தலையிட முடியாத இடத்தில மறைமுகமான தலையீடுகள் இருக்கும், ஒரு வேலை இந்த தலையீடுகள் தோல்வியில் முடிந்தால் வேறு வழியில் தலையீடுகள் இருக்கும் ஆனால் இந்த தலையீடுகள் என்பது அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்   

மத்திய கிழக்கு தாழ்வாரத்தில் பாகிஸ்தான் தவிர மற்ற நாடுகள் அணு ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை.  அப்படி தன்னிறைவு பெறாமல் பார்த்துக்கொள்வதில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக உள்ளது.  இரான் இந்த அணு கொள்கையில் தீவிரமாக  இருப்பதால் 2015 ஆம் ஆண்டில் இருந்தே பொருளாதார தடைகள் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை ஒருபக்கம் என்று தொடர் மாரத்தான் போல அமெரிக்கா மற்றும் இரான் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

இதே போல் இந்தியா அணு ஆயுத உற்பத்தியில் வளர்ச்சி நோக்கி முன்னேறி சென்ற போது அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவை அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைப்பதில் மிக தீவிரமாக செயல்பட்டார்.   மிக பிரபலமான இந்த 123  அக்ரீமெண்ட் நினைவிருக்கலாம். 

அணு ஆயுததில் தன்னிறைவு பெற்ற உலக வல்லரசு நாடுகள் அணு ஆயுத உற்பத்தியில் முன்னேறி வரும் அல்லது உற்பத்தியை தொடங்கும் நாடுகளின் தன்மையை வைத்து அவர்கள் மீது நிர்பந்தத்தை ஏற்படுத்தும், அது பல படிகளில் இருக்கும் NNPT (Neuclear Non Proliferation Treaty ) என்கிற அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்து  இட வேண்டும் சர்வதேச அணு ஆயுத அமைப்பு  IAEA ( International Atomic Energy Agency ) அவர்கள் நாட்டிற்குள் நுழைந்தது அவர்களின் அணு ஆயுத உற்பத்தியை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும்.  சுருக்கமாக சொல்வதென்றால் அணு ஆயுதம் தயாரிக்கும் ஒரு சிறிய நாடு அணு ஆயுத வல்லசுரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.  அமெரிக்கா இந்தியா மீது இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த முனைந்த பொது பல சலுகைகளை இந்தியாவிற்கு அளித்தது. இந்திய அரசின் சமாதான அரசியல் கொள்கை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நிலை மற்றும் பொருளாதார மனிதவள வளர்ச்சி காரணமாக தெற்கு ஆசியாவில் தனக்கான ஒரு நண்பனை ஏற்படுத்தி கொள்ள NNTP  யில் கையெழுத்து இடமலேலேயே இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணைக்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அணு ஆயுதம் தன்னிறைவு ஒரு பெற்ற உலக வல்லரசாக கருத்தில் கொள்ளப்பட்டது. 

ஆனால் ஈரானின் நிலை அப்படி அல்ல இரானிய அரசு ஒரு அடிப்படைவாத அரசாக கருதப்படுகிறது.  அதுவும் ஒரு மத அடிப்படைவாத அரசின் கையில் அணு ஆயுதம் வருவதை அமெரிக்கா விரும்பவில்லை.  இதற்கான நியாயமான பேச்சுவார்த்தை, ஒப்பந்தம், பொருளாதார நெருக்கடிகள் பல ஆண்டுகளாக தொடர்கிறது. 

2023 அக்டோபர் மாதம் ஹாமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் இந்த மாரத்தான் பேச்சுவார்த்தையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இரான் மீதான போரை நடத்தும் நியாயத்தை அமெரிக்காவிற்கு தேடி தந்திருக்கிறது

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புகள் ஈரானின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அதிகமாக பெரும் அமைப்புகள்.  இஸ்ரேல் மீதான கொடூர தாக்குதல் அதன் பிறகான இஸ்ரேலில் தாக்குதல் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்து நிற்கும் பொருளாதார ஆயுத வலிமை ஆகியவை இந்த அமைப்புகளின் வலிமைக்கு ஆதாரமாக இருக்கும் இரான் மீது அமெரிக்கா இஸ்ரேலின் பார்வையை திரும்ப வைத்துள்ளது 

ஈரானில் ஒரு ஆட்சி மாற்றம் அல்லது கொள்கை மாற்றம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை முடக்கும், அணு ஆயுத பரவல் தடுப்ப்பில் அமெரிக்காவின் எண்ணமும் பூர்த்தியாகும் என்பதால் இந்த யுத்தம் அமெரிக்காவால் துவங்கப்பட்டிருக்கிறது.  ஆனால் அமெரிக்கா நினைத்தது போல் இரான் ஆட்சி மாற்றம் சாத்தியமானதாக இல்லை, இரான் வழிக்கு வரவும் இல்லை என்பதால் தற்போது ஈரானின் கடல் பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பை முற்றிலும் தகர்த்திருக்கும் அமெரிக்கா படைகள் ஈரானின் ஆட்சி மாற்றத்தையும் அணு ஆயுத தடுப்பு மற்றும் தீவிரவாத அமைப்புகளின் உதவிகளை நிறுத்துதலில் போன்றவற்றை முன்னிருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நோக்கங்கள் நிறைவேறும் வரை அமெரிக்கா ஈரானுக்கு மட்டுமின்றி மத்திய கிழக்கிற்கு பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கும்.